விழுப்புரம் மாவட்டத்தில் - 1 முதல் 8 -ம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் திறப்பு :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் ஒன் றரை ஆண்டுகளுக்குப் பின் 1 முதல் 8-ம் வகுப்பு வரை நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகாரணமாக கடந்த 10 நாட்களாகதொடர் மழை பெய்தது. நீர்நிலைகள் நிரம்பி, கிராமப்புறங்களில் பல இடங்களில் தரைப் பாலங்கள் மூழ்கின. வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. ஏற்கெனவே தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3-ம் தேதியில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடு முறை விடப்பட்டு, 8-ம் தேதி மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்லைன் வகுப்பு, கல்வி தொலைக்காட்சி மூலமாக கல்வி கற்று வந்த 1 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு கடந்த 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக இருந்தது. மழையின் காரணமாக பள்ளி திறப்பு தள்ளிவைக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் மழைகால விடுமுறைக்குப் பின், நேற்று முன்தினத்தில் இருந்து கல்லூரிகளும், நேற்று முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளும் திறக்கப்பட்டன. 1 முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் அவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்