மதுரையில் கட்டிடங்களுக்கு வரி நிர்ணயம் செய்ய ‘ஒருமுறை சுய மதிப்பீட்டு திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையர் கா.ப. கார்த்திகேயன் கூறியதாவது:
நூறு வார்டுகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு சொத்து வரி விதிக்க `ஒருமுறை சுய மதிப்பீட்டு திட்டம்' செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பொதுமக்கள் வரி விதிக்கப்படாத தங்கள் கட்டிடங்களுக்கு கட்டிடத்தின் மொத்த அளவு, வரைபட அனுமதி அளவைவிட கூடுதலாகக் கட்டப் பட்டுள்ள கட்டிடத்தின் அளவு ஆகியவற்றை குறிப்பிட்டு தொடர்புடைய மண்டல அலு வலகங்களில் நவ.15 முதல் 30-ம் தேதி வரை மனு செய்து புதிய சொத்து வரி விதிப்பு செய்து கொள்ளலாம்.
இதன் பிறகும் வரி விதிப்பு செய்யாத கட்டிடங்கள் கண் டறிப்பட்டால், மாநகராட்சி விதிகளின்படி அபராதம் விதிப் பதுடன் முன் தேதியிட்டு வரி வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago