குருவித்துறையில் குருப் பெயர்ச்சி சிறப்பு யாகம் :

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை குருபக வான் கோயிலில் குருப் பெயர்ச்சி சிறப்பு யாகம் நடைபெற்றது.

சோழவந்தான் அருகே குருவித் துறை சித்திரரத வல்லப பெருமாள் கோயிலில் பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் குருபகவான் சுயம்புவாக வீற்றிருக்கிறார். அரு கில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.

நவ.13-ம் தேதி சனிக்கிழமை மாலை 6.10 மணிக்கு குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சியானார். அதையொட்டி நவ.11-ம் தேதி முதல்கால லட்சார்ச்சனை தொடங்கியது. நேற்று முன்தினம் இரண்டாம் கால, மூன்றாம் கால லட்சார்ச்சனை நடைபெற்றது. நான்காம் கால, ஐந்தாம் கால லட்சார்ச்சனை நேற்று 2 மணி வரை நடைபெற்றது.

மாலை 3 மணிக்கு யாக சாலை தொடங்கி 6.10 மணிக் குள் பரிஹார மஹாயாகம், மகாபூர்ணாஹூதி, திருமஞ்சனம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மக்களின் கோரிக்கையை ஏற்று பக்தர்களுக்கு அனுமதி வழங்கப் பட்டது. குரு பெயர்ச்சியை முன் னிட்டு ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகார பூஜைகள் நடைபெற்றன.

அதேபோல், மதுரையில் உள்ள இம்மையில் நன்மை தருவார் கோயிலிலும் குருப்பெயர்ச்சி யாகம் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்