நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம் உதவி :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாட்டுப்புற கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களுக்கு சமூக பாதுகாப்பும் நல உதவிகளும் வழங்குவதற்கு தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் அமைத்து அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாரியத்தில் நாட்டுப்புற கலையில் ஈடுபட்டுள்ள 18 வயது முடிவடைந்த 60 வயது நிறைவடையாத கலைஞர்கள் ரூ.100- பதிவு கட்டணமாக செலுத்தி உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனவரி 31-ம் தேதிக்குள் ரூ.10 கட்டணம் செலுத்தி பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 2,819 நாட்டுப்புறக் கலைஞர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்து உள்ளனர். இந்த நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ள கலைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டுப்புற கலைஞர்கள் தங்களது குழந்தைகள் பயின்றுவரும் கல்வி நிறுவனங்களிடமிருந்து படிப்புச்சான்றிதழ்கள் மட்டுமே பெற்று கல்வி ஊக்கத்தொகை பெற உரிய விண்ணப்பத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், அரசு அலுவலர் “ஆ” குடியிருப்பு, திருநெல்வேலி - 7. தொலைபேசி எண் 0462-2901890-ல் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்