கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பேபி ஷாலினி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: எனது கணவர் துரைசிங், எல்லை பாதுகாப்பு படையில் ஹவில்தாராக பணிபுரிகிறார். சில நாட்களாக அவரை போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனது கணவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்து நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் புகாரின்பேரில் அவரது கணவரின் நிலை குறித்து போலீஸார் விசாரித்துள்ளனர். இதில், கடந்த முறை சொந்த ஊர் வந்தபோது மனுதாரரை அவரது கணவர் சந்திக்காமல் தவிர்த்துள்ளார். ஆனால், தற்போது வரை போன் மூலம் தொடர்பில்தான் உள்ளனர்.
அவரது கணவர் ராஜஸ்தானில் பணியில் இருக்கிறார். அவரை வரவழைக்கும் நோக்குடன் மனுதாரர் இம் மனுவை தாக்கல் செய்துள்ளார். இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இத்தொகையை உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழுவிடம் 2 வாரத்தில் மனுதாரர் செலுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago