கீழடி அகழாய்வுக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு - பட்டா மாறுதல் செய்யாமல் அலைக்கழிப்பு :

By என்.சன்னாசி

கீழடியில் அகழாய்வுக்காக நிலம் அளித்தவர்களின் பட்டா மாறுதல் கோரிக்கையை நிறைவேற்றாமல் வருவாய்த் துறையினர் அலைக் கழித்து வருவதாகப் புகார் எழுந் துள்ளது.

சிவகங்கை மாவட்டம், கீழடி யில் அகழாய்வு பணிக்காக 2019-ல் அவ்வூரைச் சேர்ந்த சிலர் இலவசமாக நிலம் வழங்கினர். குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு அந்த நிலங்கள் சீரமைக்கப்பட்டு நில உரிமையாளர்களிடமே திரும்ப வழங்கப்பட்டது.

முன்னதாக நிலம் வழங்கியவர் களுக்கு பட்டா மாறுதல் உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவு றுத்தியிருந்தனர். இந்நிலையில், அகழாய்வுக்கு நிலம் கொடுத்த கொந்தகையைச் சேர்ந்த கருப் பையா என்பவரின் மகன்கள் மனோகரன், கருமுருகேசன், ஆண்டிச்சாமி, முத்துராஜா ஆகிய 4 பேருக்கு பட்டா மாறுதல் செய்து கொடுப்பதில் வருவாய்த் துறையினர் தாமதம் செய்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து கருமுருகேசன் கூறியதாவது:

தொடக்கத்தில் அகழாய்வுக்கு நிலம் கொடுக்க ஒப்பந்தம் செய்தபோது, எங்களுக்கான பட்டா மாறுதல் போன்ற கோரிக் கைகள் உடனடியாக நிறை வேற்றித் தரப்படும் என அரசு அதிகாரிகள் உறுதியளித்தனர். அகழாய்வுக்காக நாங்கள் 5 ஏக்கர் நிலம் கொடுத்தோம்.

இந்நிலையில் கூட்டுப் பட்டா விலுள்ள எங்களுக்கான 5 ஏக்கர் நிலத்தை பாகப்பிரிவினை செய்து தனித்தனியே பட்டா மாறுதல் செய்து கொடுக்க பலமுறை முயன்றும் அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.

கடந்த மாதம் 29-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கீழடிக்கு வந்தார். அப்போது, உளவுத்துறை போலீஸார் உதவியுடன் முதல் வரிடம் மனு அளிக்க முயன்றோம். இதை அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர், திருப்புவனம் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் ஆகியோர் எங்கள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தனர்.

இதனால் முதல்வரிடம் நாங்கள் மனு அளிக்கவில்லை. ஆனால், அதன் பின்பு தற்போது வரை பட்டா மாறுதல் செய்ய நடவடிக்கை எடுக்காமல் எங்களை அலைக்கழித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக வட்டாட்சியர் ரத்தினவேல்பாண்டியனிடம் கேட்டபோது, ‘‘கருமுருகேசன் குடும்பத்தினருக்கான கோரிக்கை பரிசீலனையில் உள்ளது. அவர்கள் பட்டா மாறுதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணம் பதிவில்லாத ஆவணமாக இருப் பதால் விசாரித்து நடவடிக்கை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கை நிறை வேற்றப்படும்’’ என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்