மதுரையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்தோர் புகார் தெரிவிக்கலாம் என்று பொருளாதார குற்றத்தடுப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மதுரை வடக்கு மாசி வீதியில் கிரீன் டெக் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டது. அதன் நிர்வாகிகளாக அனீஸ் முகமது, சுப்பிரமணிய குமார், சுந்தரேசன் உள்ளிட்டோர் இருந்தனர். அதிக வட்டி தருவதாகக் கூறியதால், இந்நிறுவனத்தில் ஏராளமானோர் முதலீடு செய்தனர்.
இந்நிலையில், இந்நிறு வனத்தில் ரூ.3.50 லட்சம் முதலீடு செய்த விளாங்குடியைச் சேர்ந்த கீதா, தனக்கு வட்டியையும், முதலீட்டுப் பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று புகார் மனு அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளோம். இவரைப்போல் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாகத் தெரிய வந்ததுள்ளது. இதுவரை 152 முதலீட்டாளர்கள் மட்டுமே புகார் செய்துள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய அனீஷ் முகமது கடந்த மாதம் தென்காசி பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி வழக்கு தொடர்ந்து விசார ணையில் இருந்து வருகிறது.
எனவே, இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டோர் மதுரை விசுவநாதபுரம் மெயின் ரோட்டிலுள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். முதலீட் டாளர்களின் வைப்புத் தொகை யை திரும்பப் பெற்றுத்தர நட வடிக்கை எடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 0452- 2642161 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago