உசிலம்பட்டி சந்தையில் ஏலம் விடாமல் கட்டணம் வசூலித்தோர் மீது நடவடிக்கை : மதுரை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

By செய்திப்பிரிவு

உசிலம்பட்டி சந்தையில் 7 ஆண் டுகளாக ஏலம் விடாமல் கட்டணம் வசூலித்தோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் மதுரை ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரையைச் சேர்ந்த அமாவாசை, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: உசிலம்பட்டியில் ஊராட்சி ஒன்றியத்துக்குச் சொந்தமான வாரச்சந்தை, தினசரிச் சந்தையில் உள்ள கடைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் உரிமம் பொது ஏலம் மூலம் வழங்கப்படும்.

கடந்த 7 ஆண்டுகளாகப் பொது ஏலம் விடப்படவில்லை. இருப்பி னும் சில தனி நபர்கள் தினசரி, வாரச் சந்தைகளில் கட்டணம் வசூலிக்கின்றனர்.

இவர்கள் பல லட்சம் ரூபாய் வசூல் செய்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். இந்த முறைகேட்டுக்கு ஊராட்சி ஒன் றிய அதிகாரிகள், ஊழியர்கள் உடந்தையாக உள்ளனர்.

எனவே, குத்தகைக் காலம் முடிந்து 7 ஆண்டுகளாகப் பொது ஏலம் நடத்தாமல் சந்தையில் கட்டணம் வசூலித்தோர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக் கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட் டிருந் தது. இந்த மனுவை நீதிபதிகள் புஷ்பா சத்தியநா ராயணா, வேல் முருகன் அமர்வு விசாரித்து, மதுரை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்