மதுரை சாலைகளில் திரியும் மாடுகள் : போலீஸ், மாநகராட்சி இணைந்து நடவடிக்கை எடுக்குமா?

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை நகர் சாலைகளில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் மாடுகள் சுற்றித் திரிவதைத் தடுக்க மாநகராட்சியும், போலீஸாரும் இணைந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரையில் மாடுகளை வளர் ப்பவர்கள் காலையில் பால் கறந்து விட்டு அவற்றை அவிழ்த்து விடு கின்றனர்.

இவை பகல் முழுவதும் காளவாசல் பைபாஸ் சாலை, மேம்பாலம், எல்லீஸ் நகர் சாலை, திருவாதவூர் சாலை, ஒத்தக்கடை சாலை, மாட்டுத்தாவணி சாலை, வைகை ஆறு சாலைகள், கே.கே.நகர் சாலை உட்பட நகரின் அனைத்து சாலைகளிலும் விபத் தை ஏற்படுத்தும் வகையில் நடமா டுகின்றன.

இரவில் கூட்டம், கூட் டமாகத் தூங்குகின்றன. வாகனங்கள் ஹாரன் அடிக்கும்போது சப்தத்தில் மிரண்டு ஓடும் மாடுகள், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள், கார்கள் மீது மோதுகின்றன. இதில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.

மதுரை மாநகர் பகுதியில் கால் நடைகளை வளர்ப்போருக்கு மாநகராட்சி நிர்வாகம் சில மாதங்களுக்கு முன் வரி விதித் தது. சாலைகளில் நடமாடும் மாடுகளுக்கும் அபராதம் விதிக் கப்பட்டது.

இந்த உத்தரவை மாநகராட்சி தீவிரமாகப் பின்பற்றவில்லை. அதனால் தற்போது சாலைகளில் மாடுகள் அட்டகாசம் அதிகரித் துவிட்டது. எனவே மதுரை மாநகராட்சியும், போலீஸாரும் இணைந்து மாடுகள் சாலைகளில் திரிவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்