சூப்பர் ஸ்பெஷாலிட்டியில் இருந்து இன்று முதல் - அரசு மருத்துவமனைக்கு கரோனா நோயாளிகள் மாற்றம் :

By செய்திப்பிரிவு

மதுரையில் கரோனா சிறப்பு சிகிச்சை மையமாகச் செயல்பட்டு வந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இருந்து கரோனா நோயாளிகள் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு இன்று முதல் மாற்றப்படுகின்றனர்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் ரூ.350 கோடியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டது.

சிறப்பு உயிர்காக்கும் சிகிச்சை துறைகள் இந்த சூப் பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் கடந்த ஆண்டு கரோனா தொற்று தீவி ரமாகப் பரவியது.

தென் மாவட்டங் களில் கரோனாவால் பாதித்த நோயாளி கள் அனைவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கே பரிந்துரைக்கப்பட்டனர்.

அதனால், சூப்பர் ஸ்பெ ஷாலிட்டி மருத்துவமனை கரோ னா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது.

இதுவரை பல ஆயிரம் கரோனா நோயாளிகளை இந்த சிறப்பு சிகிச்சை மையம் காப்பாற்றி உள்ளது. தற்போது கரோனா தொற்று குறைந்ததால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள கரோனா நோயாளிகளை அரசு ராஜாஜி மருத்துவம னையில் உள்ள பழைய மகப்பேறு கட்டிடத்துக்கு இன்று முதல் (நவ.13) மாற்றும் பணி தொடங் குகிறது. நாளை (நவ.14) முதல், கட்டிடத்தின் முதல் தளத்தில் உள் நோயாளிகள் பிரிவும் கீழ் தளத்தில் ஐசியூ பிரிவு மற்றும் புற நோயாளிகள் சிகிச்சைப் பிரிவும் செயல்படும். இத்தகவலை அரசு மருத்துவமனை டீன் ரெத்தினவேலு தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்