நாடு முழுவதும் 75 கிராமங்களை ஊட்டச்சத்து மிகை கிராமங் களாக உருவாக்கும் திட்டத்தை மத்திய வேளாண் அமைச்சகம் தொடங்கியுள்ளது. அந்த அடிப்படையில் மதுரை வேளாண் கல்லூரி வளாகத்தில் உள்ள சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், சத்திரப்பட்டி கிராமத்தை ஊட்டச்சத்து கிரா மமாக மாற்ற பல்வேறு செயல் திட்டங்களை கிராமத்தில் நிறை வேற்றி வருகின்றனர்.
அதற்காக பெண்கள், பள்ளிக் குழந்தைகளை உள்ளடக்கி ஊட்டச்சத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பாரம்பரிய அறிவை பெருக்கி ஊட்டச்சத்து நிறைந்த கிராமப் புறத்தை வளர்த்தெடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்மூலம் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க வேளாண் விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago