ராமநாதபுரத்தில் அரசு பெண் மருத்துவர் தற்கொலை : உறவினர்கள் போராட்டத்தையடுத்து டாக்டர் கணவர் கைது

ராமநாதபுரத்தில் அரசு பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக, அவரது டாக்டர் கணவரை கைது செய்யக் கோரி எஸ்பி அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதை யடுத்து கணவரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் சுகந்தா (31). இவர் தேவிபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்து வராகப் பணிபுரிந்து வந்தார். சுகந்தாவுக்கும் ராமநாதபுரம் அருகே சடையன்வலசையைச் சேர்ந்த டாக்டர் மகேஸ்வரனுக்கும் 2019-ம் ஆண்டில் திருமணம் நடந் தது.

மகேஸ்வரன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் உயர்கல்வி படித்து வருகிறார். அதனால் சுகந்தாவை ஒரு மாதம் விடுப்பில் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் கடந்த மாதம் ராமநாதபுரம் திரும்பி வந்து பெரியார் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து இரு வரும் தங்கி இருந்தனர்.

இந்நிலையில், சுகந்தா கடந்த 8-ம் தேதி விஷம் சாப்பிட்டு தற்கொ லைக்கு முயன்றார். மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுகந்தா, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது உடல், உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளது.

சுகந்தாவின் தாயார் சரஸ்வதி, தனது மகளை மகேஸ்வரன் கொடுமைப்படுத்தியதாகவும், அதன் காரணமாகவே அவர் தற் கொலை செய்து கொண்டதாகவும் போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மகேஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்து ராமநாதபுரம் பஜார் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுகந்தாவின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் இந்திரா நகரைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் நேற்று ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். மகேஸ் வரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அவர்களிடம் ராமநா தபுரம் சரக டிஐஜி மயில் வாகனன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து இவ்வழக்கில் டாக்டர் மகேஸ்வரனை ராமநாதபுரம் பஜார் போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE