உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் இன்று காலை தண்ணீர் திறக்கப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
தற்போது வைகை அணையில் 69 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது.
இது குறித்து அமைச்சர் பி.மூர்த்தி கூறியது: முதல்வர் பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதால், நாளை (இன்று) தண்ணீர் திறக்கப்படுகிறது. முதற்கட்டமாக 150 கன அடி தண்ணீர் திறக்கப்படும். போதுமான அளவுக்கு தண்ணீர் திறக்கப்படும்’ என்றார். இன்று காலை 8 மணிக்கு 58 கிராம கால்வாயில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன்உள்ளிட்டோர் தண்ணீரை திறந்து விடுகின்றனர். முன்னதாக மேலூர் பகுதியில் மழை பாதிப்பு குறித்து அமைச்சர் பி.மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago