கிருஷ்ணகிரியில் நடந்த தேசிய அடைவு ஆய்வு தேர்வை மாணவ, மாணவிகள் எழுதினர்.
மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் 3, 5, 8 மற்றும் 10 ஆகிய வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் தேசிய அடைவு ஆய்வு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இத்தகைய தேர்வுகள், மாணவர்களின் கல்வித் திறனை அறிந்து கொள்ளும் விதமாக நடத்தப்படுகிறது. மேலும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வு கடைசியாக கடந்த 2018 – 2019 ம் கல்வி ஆண்டில் நடத்தப்பட்டது. பின்னர் கரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன.
அதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக ஆன்-லைன் வகுப்பு நடந்ததால் தேர்வு நடத்தப்படவில்லை. இக்கல்வி ஆண்டில் தேசிய அடைவு ஆய்வு தேர்வு நேற்று நடந்தது கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இந்த முறை 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்புகளுக்கு மட்டும், நேற்று தேசிய அடைவு ஆய்வுத் தேர்வுகள் நடத்தப்பட்டன. 2 மணி நேரம் நடத்தப்படும் இத்தேர்வில் 60 கேள்விகள் கேட்கப்பட்டன. மாணவர்களுக்கு, தமிழ், கணிதம், அறிவியல், சூழ்நிலையியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. கிருஷ்ணகிரியில் அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆர்.சி., பாத்திமா உயர்நிலைப்பள்ளி உட்பட மாவட்டம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இத்தேர்வுகள் நடைபெற்றன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago