விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழக - அலைடு ஹெல்த் சயின்ஸ் வகுப்புகள் தொடக்க விழா :

விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.

விழாவில், முதலாமாண்டு மாணவர்களை மூத்த மாணவர்கள் வாழ்த்து அட்டை மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். துறையின் பேராசிரியை தமிழ்சுடர் வரவேற்றார். விழாவில் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் செயல்பாடுகள் மற்றும் சிறப்புகள் குறித்து பேசினார்.

விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சுதிர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பல்கலைக் கழகத்தின் தரம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினார்.

மேலும், மாணவர்கள் கல்லூரி காலங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி வெற்றி பெறுமாறு வாழ்த்துகளை தெரிவித்தார். விம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் மீனாட்சி சுந்தரம், தொழிற்துறை தொடர்புகள் குறித்து விளக்கினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக பல்கலைக் கழகத்தின் தரக்கட்டுபாடு இயக்குநர் டாக்டர் ஞானசேகர் மற்றும் விம்ஸ் மருத்துவமனையின் துணை மருத்துவ இயக்குநர் டாக்டர் அசோக் விழாவில் கலந்துகொண்டனர். துறை யின் பேராசிரியை கலைவாணி நன்றி கூறினார். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்