நெல்லைக்கு 1,458 டன் யூரியா வரத்து :

திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா. கஜேந்திரபாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது பிசான பருவ நெல் சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாகுபடிக்கு தேவையான 1,458.9 மெட்ரிக்டன் யூரியா மெட்ராஸ் பெர்டிலைசர் நிறுவனம் மூலமாக திருநெல்வேலிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் திருநெல்வேலி மாவட்டத்துக்கு 547.65 மெட்ரிக் டன், தென்காசி மாவட்டத்துக்கு 344.25 மெட்ரிக்டன், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 222.75 மெட்ரிக்டன், தூத்துக்குடி மாவட்டத்துக்கு 344.25 மெட்ரிக்டன் பிரித்தளிக்கப்பட்டு லாரிகளில் அனுப்பப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை தங்கள் வட்டாரங்களில் உள்ள உரக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் நிலங்களில் மண்பரிசோதனை செய்து பெறப்பட்ட மண்வள அட்டையின் அடிப்படையில் அல்லது வேளாண்மைத் துறையின் பரிந்துரைப்படி உரமிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்