திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நவம்பர் மாதத் துக்கான விவசாயிகள் குறை தீர்வுக்கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:
விவசாயி: தென்பெண்ணை - பாலாறு இணைப்பு திட்டம் செயல்படுத்த அரசு நிதி ஒதுக் கியும் அதற்கான பணிகள் இன் னும் தொடங்கப்படவில்லை.
ஆட்சியர்: நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அரசுக்கு இது தொடர்பாக கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விவசாயி: கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாய பயிர்க் கடன் கேட்டால் கடன் தொகை யில் 20 சதவீதத்துக்கு உரம் வாங்கிக்கொள்ள வேண்டும், பாக்கியுள்ள தொகை மட்டுமே கடனாக வழங்கப்படும் என தெரி விக்கப்படுகிறது.
ஆட்சியர்: கூட்டுறவு கடன் சங்க அலுவலர்களிடம் பேசி முடிவு தெரிவிக்கப்படும்.
விவசாயி: கோமாரி நோயால் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள் ளன. சிறப்பு முகாம் நடத்தி கால் நடைகளை பாதுகாக்க வேண்டும்.
ஆட்சியர்: உடனடியாக கால் நடை சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
விவசாயி: சிறுதானிய பயிர் வகைகளுக்கு உரிய விலை கிடைக்க வில்லை.
ஆட்சியர்: விரைவில் சரி செய்யப்படும்.
விவசாயி: திருப்பத்தூர் மாவட் டத்தில் பருத்தி, மணிலா அறுவடை செய்ய நவீன இயந்திரங்களை வழங்க வேண்டும்.
ஆட்சியர்: அரசின் கவனத் துக்கு கொண்டு சென்று உரிய நட வடிக்கை எடுக்கப்படும்.
விவசாயி: வடகிழக்கு பருவ மழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்துள்ளது. எதிர் பார்த்த அளவைக் காட்டிலும் கூடுதலாக மழை பெய்தாலும் பெரும்பாலான ஏரிகள் நிரம்பாமல் உள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 20 ஏரிகளில் 25 சதவீதத்துக்கு குறைவாகவே தண்ணீர் உள்ளது. குறிப்பாக, நாட்றாம்பள்ளி, கந்திலி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய 3 ஒன் றியங்களில் ஏரிக்கு செல்லும் நீர்வரத்துக் கால்வாய்கள் தூர்ந்துள்ளன. நீர்வரத்துக் கால் வாய்களை தூர்வாரி ஏரியில் தண்ணீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆட்சியர்: அந்தந்த ஒன்றிய அலுவலர்கள் மூலம் ஆய்வு நடத்தி நீர்வரத்துக் கால்வாய் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago