நீட் தேர்வில் சாதனை புரிந்த - வேளாங்கண்ணி அகாடமி மாணவர்களுக்கு பாராட்டு விழா :

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வேளாங்கண்ணி அகாடமியில் பயின்று ‘நீட்’ தேர்வில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு தம்பிதுரை எம்.பி., பரிசு வழங்கி பாராட்டினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வேளாங்கண்ணி அகாடமியில் பயிற்சி பெற்று 2021-ம் ஆண்டில் நடந்த, ‘நீட்’ தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இவர்களில், 720 மதிப்பெண்ணுக்கு 690 மதிப்பெண்கள் பெற்று, மதன் என்ற மாணவர் மாநில அளவில் சாதனை படைத்தார். கவின்ஆதித்யா 646 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், வித்திஷா 631 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர். இந்த அகாடமியில் தேர்வு எழுதிய மாணவர்களில் 42 பேர் அரசு மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண் பெற்றுள்ளனர். இவ்வாறு தகுதி பெற்ற மாணவர்களுக்கு பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது.

அகாடமியின் தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்தார். விழாவில் வேளாங்கண்ணி கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், மக்களவை முன்னாள் துணைத் தலைவருமான எம்பி தம்பிதுரை பாராட்டு விழாவில் பங்கேற்று, நினைவுப் பரிசு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், பர்கூர் ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெயபால், கார்த்திகேயன் மற்றும் பள்ளி முதல்வர், அகாடமி பயிற்சியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்