செஞ்சி அருகே சிவன் கோயில் கும்பாபிஷேகம் :

By செய்திப்பிரிவு

செஞ்சி அருகே மேல்பாப்பாம்பாடி கிராமத்தில் உள்ள கரை கண்டநாத சிவபெருமான் கோயில் மற்றும்  மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது.

கடந்த 8-ம் தேதி திருவிளக்கு வழிபாடு, பிள்ளையார் வழி பாடுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து 9-ம் தேதி கோபூஜை, நேற்று முன் தினம் நவக்கன்னியர் வழிபாடு, நேற்று காலை திருப்பள்ளி எழுச்சி, திருக்குடங்கள் வழிபாடைதொடர்ந்து கரைகண்ட நாத பெருமான் கருவறைவிமானத்தில் திருக்குட நன்னீராட்டு நடை பெற்றது.

இதையடுத்து கருவறை மூல மூர்த்திக்கு நன்னீராட்டு, பின்னர் மாரியம்மன் கோயில் விமானத்திற்கு நன்னீராட்டு, கருவறை மூல மும்மூர்த்திக்கு நன்னீராட்டு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்