விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
விழுப்புரத்தில் நடைபெற்றஅனைத்துறை அலுவலர்க ளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் கூறியது:
நரிக்குறவர், பழங்குடியினர் மற்றும் இதர விளிம்பு நிலை மக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் நரிக்குறவர், பழங்குடியினர் மற்றும் இதர விளிம்பு நிலை மக்கள் வசிக்கும் ஒவ்வொரு கிராமப்பகுதிகளிலும் நேரடி கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்பகுதிகளுக்கு தேவையான அனைத்து உட்கட்ட மைப்புகளை சம்மந்தப்பட்ட துறை கள் கண்டறிந்திட வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை,சாதிச்சான்றிதழ், ஓய்வூதியம், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் போன்றவைகளை கண்டறிந்திட வேண்டும். மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை, மொத்த மக்கள் தொகை, ஆண்கள்,பெண்கள் எண்ணிக்கை, மூன்றாம் பாலினத்தவர், பள்ளி மற்றும் கல்லூரி செல்பவர்களின் எண்ணிக்கையை கண்டறிய வேண்டும். வீடு, குடிநீர், சாலை வசதி, வீட்டு மனைப்பட்டா பெற்றவர்களின் எண்ணிக்கை போன்றவற்றினை துறை சார்ந்த அலுவலர்கள் கண்டறிந்திட வேண்டும்.மேலும் அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திண்டிவனம் உதவி ஆட்சியர் அமித், திட்ட இயக்குநர் சங்கர்,மகளிர் திட்ட இயக்குநர் காஞ்சனா,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, கோட்டாட் சியர் அரிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago