ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் இடிந்த சுவர் : பயந்து வெளியே ஓடிய அலுவலர்கள்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவ லகத்தில் திடீரென சுவர் இடிந்து விழுந்தது, இதனால் அங்கிருந் தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் 1988-ல் கட்டப்பட்ட கட்டிடம், தரைத்தளம் மற்றும் 2 மாடிகளுடன் செயல்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தில் தற்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர், நில அளவைத்துறை அலுவலகம், ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இக்கட்டிடம் பல இடங்களில் பழுதடைந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழுது பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் மூன்றாவது மாடியில் (மொட்டை மாடியில்) இருந்த சிமெண்ட் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து கீழ் தளத்தில் வாகனம் நிறுத்துமிடத்தில் விழுந்தது. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வாகனங்களும் சேதமடையவில்லை.

சுவர் இடிந்து விழுந்த சத்தத்தில் முதன்மைக் கல்வி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் இருந்த அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி வந்தனர். பின்னர் சுவரின் ஒரு பகுதி விழுந்ததை பார்த்துவிட்டு திரும்பிச் சென்றனர். பொதுமக்கள், அலுவலர்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன், பழுதடைந்த பகுதிகளை பொதுப் பணித்துறையினர் சரி செய்ய வேண்டும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்