ஓய்வூதியர்கள் டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழ் பெற சிறப்பு ஏற்பாடு :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் மு.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம் மத்திய அரசு, மாநில அரசு மற்றும் பொதுத்துறைகளின் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி ஆயுள் சான்றிதழ் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திய அஞ்சல் துறை மூலம் கடந்த ஆண்டு இந்த திட்டத்தால் பல ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் முறையில் கைரேகையை பதிவு செய்து ஆயுள் சான்று சமர்ப்பித்து பயன் பெற்றார்கள். இந்த ஆண்டும் அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி மூலம் ஒரு வாரம் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மிகவும் வயதான ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியாத நிலையில் அவர்களின் வீட்டிலேயே தங்கள் பகுதி தபால்காரரிடம் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்துக் கொள்ளலாம். இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 செலுத்த வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்