திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை, மாநில தொழில்துறை அமை ச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
இங்கு, நிமிடத்துக்கு 600 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். இம்மருத்துவமனையில் 500 படுக்கைவசதிகளுடன் கூடிய தாய்சேய் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவுகளில் உள்ள நோயாளிகளுக்கு இந்த உற்பத்தி நிலையத்திலிருந்து பெறப்படும் ஆக்சிஜன் பயன்படும். ஆண்டுக்கு 15 ஆயிரம் நோயாளிகள் பயன்பெறுவர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழக சட்டப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன், டிவிஎஸ் குழும நிர்வாக இயக்குநர் கோபால சீனிவாசன், எம்.பி. ஞானதிரவியம், எம்.எல்.ஏக்கள் அப்துல்வகாப், ரூபிமனோகரன், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago