அத்தியாவசிய தேவைக்கு மட்டும் - ஏற்காடு மலைப்பாதையில் கனரக வாகனங்களுக்கு அனுமதி :

சேலம் ஏற்காடு மலைப்பாதையில் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் கனரக வாகன போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த அக்டோபர் 11-ம் தேதி கனமழை காரணமாக சேலம் ஏற்காடு மலைப்பாதையின் 2-வது மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே சுமார் 25 மீட்டர் உயரம் மற்றும் 15 மீட்டர் அகலத்துக்கு மண்சரிவு ஏற்பட்டது.

தற்காலிகமாக சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சீரமைக்கப்பட்ட இடத்தில் 75 மீட்டர் நீள சாலையில் ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இச்சாலையில் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் கனரக சரக்கு வாகனங்கள் 30 கிமீ வேகத்தில் செல்ல அனுமதிக்கப்படுகிறது என சேலம் ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஏற்காடு செல்ல மாற்றுப் பாதையான குப்பனூர் சாலையில் கடந்த 4-ம் தேதி மேகவெடிப்பு காரணமாக பெய்த மழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுமார் 7 கிமீ நீளத்திற்கு சாலை ஆங்காங்கே சேதமடைந்தன, இதையடுத்து, வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து நடைபெற்ற தற்காலிக சீரமைப்புப் பணிகள் கடந்த 7-ம் தேதி முடிவடைந்தது, எனவே, ஏற்காடு குப்பனூர் சாலையில் இலகுரக வாகனங்கள் மட்டும் 30 கிமீ. வேகத்தில் சென்று வர அனுமதித்து ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்