சேலத்தில் டெங்கு ஒழிப்புப் பணிக்கு - ரூ.16.90 லட்சத்தில் புகை தெளிப்பான் கருவிகள் :

By செய்திப்பிரிவு

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிக்கு ரூ.16.80 லட்சம் மதிப்பில் 20 புகை தெளிப்பான் கருவிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் பரவுவதைத் தடுக்க மாநகராட்சி சார்பில் மலேரியா பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொசு மருந்து தெளிக்க அவர்களுக்கு ஏற்கெனவே 21 புகை தெளிப்பான் கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூடுதலாக 20 புகை தெளிப்பான் கருவிகள் ரூ.16.80 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்பட்டன.

புகை தெளிப்பான் கருவிகளை, மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், மலேரியா ஒழிப்பு பணியாளர்களிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவர் ஜோசப், சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம், சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்