தென்பெண்ணையாற்றின் கரையின் இருபுறம் உள்ள கிராமங்களுக்கு வெள்ளஅபாய முன்னெச்சரிக்கை செய்யப்பட்டுள் ளதாக கள்ளக்குறிச்சி ஆட்சியர் பி.என்.தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்டம் சாத் தனூர் அணையிலிருந்து விநாடிக்கு 1,540 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது மழையினால் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் கூடுதலாக உபரிநீர் வெளியேற் றும் சூழ்நிலை உள்ளது. எனவே அணையிலிருந்து மிகை நீர் வெளியேறும் தென் பெண்ணையாற்றின் இருபுறம் உள்ள கிராமங்களான மூங்கில்துறைப்பட்டு, சீர்பந்தநல்லூர், ஜம்படை, திருவரங்கம், கல்லிபாடி, மேலந்தல், காங்கியனூர், ஜம்பை, ஜா.சித்தாமூர், மணலூர்பேட்டை, சாங்கியம், விளந்தை, கழுமரம் மற்றும் கோட்டகம் கூவனூர், மிலாரிப்பட்டு, தகடி, தொட்டி, டி.முடியனூர், கரடி, கீரனூர், திருக்கோவிலூர், ஆவியூர், வடக்கு நெமிலி, அத்தாண்டமருதூர், வடமருதூர், சுந்தரேசபுரம், பிள்ளை யார்குப்பம், குலதீபமங்கலம் ஆகிய பகுதிகளில் கரையின் இருபுறமும் உள்ளதாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெள்ளஅபாய எச்சரிக்கை குறித்து தொடர்பு டைய கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை களுக்கு பொதுமக்கள் முழு ஒத்து ழைப்பு வழங்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மணிமுக்தா அணை
‘கள்ளக்குறிச்சி மாவட்டம் மணிமுக்தா நதி அணையிலிருந்து விநாடிக்கு 1,567 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகி றது.எனவே மணிமுக்தா ஆற்றின் இருபுறமும் உள்ள ராயபுரம்,பாலப்பட்டு, அணைக்கரை கோட்டாலம், சூலாங்குறிச்சி, பல்லகச்சேரி, வீரசோழபுரம், மடம், சித்தலூர், வடபூண்டி, கொங்கராய பாளையம், உடையநாட்சி, கூத்தக்குடி ஆகிய கிராமங்களில் கரையின் இருபுற மும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இதே போல சின்னசேலம் அருகே உள்ளகோமுகி அணையிலிருந்து விநாடிக்கு 995 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. எனவே கோமுகி ஆற்றின் இருபுறமும் உள்ள வடக்கனந்தல், கச்சிராப்பாளையம், ஏர்வாய்ப்பட்டினம், சோமாண்டார்குடி, மட்டிகைக்குறிச்சி, கள்ளக்குறிச்சி, நிறைமதி, விருகாவூர், நாகலூர், பொரசக் குறிச்சி, வேளாக்குறிச்சி, வரஞ்சரம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் பாது காப்பாக இருக்க வேண்டும்' என்று தெரி வித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago