சிவகங்கையில் உர தட்டுப்பாடு : தனியார் கடைகளில் குவியும் விவசாயிகள்

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் 2.5 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு செப்டம்பரிலேயே விவசாயிகள் சாகுபடியைத் தொடங்கினர். ஆனால், 3 மாதங் களாகியும் உரத்தட்டுப்பாடு பிரச்சினை முழுமையாகத் தீர வில்லை.

பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் உரத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. ஒருபுறம் மாநிலம் முழுவதும் உரத்தட்டுப்பாடு நிலவினாலும், வந்த உரங்களை விநியோகிப்பதில் அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லாததால் கடும் தட்டுப்பாடாக மாறியுள்ளது.

மாவட்ட நிர்வாகமும், வேளாண்துறையும் உரங்களை பல்வேறு இடங்களில் இருந்து பெற்றுக் கொடுத்தாலும், விநியோகத்தில் குளறுபடி உள்ளது. இதனால் சில தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் கூடுதலான உரங்கள் இருப்பில் உள்ளன. ஆனால், பல சங்கங்களில் ஒரு மூட்டை உரம் கூட கிடையாது. இதைப் பயன்படுத்தி கூட்டுறவுச் சங்க ஊழியர்களே மூட்டைக்கு ரூ.200 வரை கூடுதல் விலைக்கு விற்கின்றனர். மானாமதுரை தனியார் உரக் கடைகளில் உரங்களுக்காக ஏராளமான விவசாயிகள் நேற்று குவிந்தனர்.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மாவட்டத்தில் யூரியா 600 டன், டிஏபி 106 டன், காம்ப்ளக்ஸ் 2,384 டன், பொட்டாஷ் 324 டன் இருப்பு உள்ளது. மேலும் காரைக்காலில் இருந்து 1,000 டன்னும், மங்களூருவில் இருந்து 500 டன் யூரியா நவ.15-க்குள் வந்துவிடும். அதன் பிறகு தட்டுப்பாடு குறையும். இருக்கும் உரங்களைத் தட்டுப்பாடின்றி விநியோகிக்க கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கி உள்ளார் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்