வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி - ரங்கம் ரங்கநாதர் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி :

By செய்திப்பிரிவு

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெறவுள்ள வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. பகல் பத்து, ராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுவர். இந்த ஆண்டு இவ்விழா டிச.3-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது.

முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு டிச.14-ம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவையொட்டி கோயில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணிக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று ஆயிரங்கால் மண்டபம் அருகே நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், புனிதநீர் ஊற்றி, ஆராதனை செய்யப்பட்டு, முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் கொட்டகை அமைக்கும் பணி தொடங்கப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் செ.மாரிமுத்து, மண்டல இணை ஆணையர் அர.சுதர்சன் மற்றும் கோயில் ஊழியர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்