ஈரோடு, கோபி, தருமபுரி அரசு ஐடிஐ-களில் 18-ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை :

By செய்திப்பிரிவு

ஈரோடு காசிபாளையம், கோபி டி.ஜி.புதூர், தருமபுரி ஆகிய இடங்களில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ) செயல்பட்டு வருகிறது. இவற்றில் நேரடி மாணவர் சேர்க்கை வரும் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் டெக்ஸ்டைல் வெட்ப்ராசசிங் டெக்னீசியன் மற்றும் மெஸினிஸ்ட் தொழிற்பிரிவிலும், 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வெல்டர் தொழிற்பிரிவிலும் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இப்பயிற்சியில் சேர மாணவர்களுக்கு 14 வயது முதல் 40 வயது வரையும், மாணவிகளுக்கு வயது வரம்பு கிடையாது.

பயிற்சியில் சேரும் மாணவ, மாணவியருக்கு கட்டணமில்லா பயிற்சியுடன் மாதம் ரூ.750 உதவித் தொகை, விலையில்லா பாடபுத்தகங்கள், மடிக்கணினி, மிதிவண்டி, வரைபடக் கருவிகள், சீருடை, இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு கோபி ஐடிஐ 04285-233234, 94990 55705, ஈரோடு ஐடிஐ 0424-2275244, 9443257677, தருமபுரி ஐடிஐ 96886 75686, 88831 16095 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்