கடலூர் மாவட்டத்தில் கனமழை - 75 ஏரிகள் முழுமையாக நிரம்பின :

By செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டத்தில் பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 228 ஏரிகளில் 75 ஏரிகள் முழுமையாக நிரம்பியிருப்பதாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கனமழை காரணமாக, கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட வில்வநகர் பகுதி குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படாதாவாறு மோட்டார் பம்பு மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணிகள் நடந்தன. காமராஜ் நகர் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் பம்பு மூலம் வெளியேற்றப்பட்டது. இப்பணிகளை ஆட்சியர் பால சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குண்டுஉப்பலவாடி சப்தகிரி நகரில் உள்ள வடிகால்களில் மழைநீர் வடிய ஏதுவாக தூர் வாரும் பணி நடைபெறுவதை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

அப்போது ஆட்சியர் தெரிவித்த தாவது:

கடலூர் மாநகராட்சியில் தேங் கிய மழை நீரை வெளியேற்ற 10 ஜேசிபி இயந்திரங்கள் வழங் கப்பட்டு, அதில் 9 குழுக்களாக 45 பேர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 45 வார்டுகளிலும் மழைநீர் தேங்கா வண்ணம் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள் ளப்படும். மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்தேக்கங்களையும் கண்காணித்து வருகிறோம். பொதுப்பணித்துறை கட்டுப் பாட்டில் 228 ஏரிகள் உள்ளன. 75 ஏரிகள் முழுவதுமாக நிரம் பியுள்ளன 164 ஏரிகள் 50 சதவீதம் நிரம்பியுள்ளன.

மாவட்டத்தில் 278 பகுதிகள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு ஒவ்வொரு பகுதியையும் கிராம அளவிலான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து அப்பகுதி கண் காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

அப்போது மண்டல இயக்குநர் (நகராட்சி நிர்வாகம்) சரவணன், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ஜெகதீஸ்வரன், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) மருத்துவர் அரவிந்த் ஜோதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

278 பகுதிகள் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்