தொடர் மழையால் மரக்காணம்அருகே ஓங்கூர் ஆற்றில் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இத னால் கானிமேடு - மண்டகப்பட்டு இடையில் உள்ள ஆற்று தரைப்பாலம் மூழ்கி மண்டகப்பட்டு கிராமம் தனித்தீவாக காட்சி யளிக்கிறது. இந்தக் கிராமத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட குடும்பங் களைச் சேர்ந்தவர்கள் தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் இப்பகுதி மக்களை அரசு அலுவலர்களும் நேரில் சென்று பார்வையிட்டு எந்த உதவியும் செய்ய முடியாத அவல நிலை உள்ளது.
மண்டகப்பட்டு கிராமத்தில் உள்ளவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லவிழுப்புரம் மாவட்ட நிர்வாகத் தினர், கந்தாடு ஊராட்சி மன்ற நிர்வாகத்தை முடுக்கி விட்டு, மழை நீரை மின்மோட்டார் மூலம் வெளியேற்றுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.
ஓங்கூர் ஆற்று வெள்ளப் பெருக்கினால் கானிமேடு, அசப்பூர், ராயநல்லூர், நல்லம்பாக்கம் போன்ற கிராமங்களும் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கந்தாடு, அசப்பூர், ராயநல்லூர், நகர், நல்லம்பாக்கம், ஆலத்தூர், வடகோட்டிப்பாக்கம் ஆகிய கிராமங்களில் நடவு செய்து இருந்த ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இப்பகுதியில் சில வீடுகளும் மழையால் இடிந்துள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago