புதுக்கோட்டை மாவட்டம் ஆவூர் அருகே மழை நீரை கண்மாய்க்கு கொண்டு செல்வதற்காக குடி வரி வசூலித்து கால்வாயை தூர்வாரும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
விராலிமலை தாலுகா ஆவூர் அருகே செங்களாக்குடியில் 420 ஏக்கரில் பெரியகுளம் எனும் கண்மாய் உள்ளது. நீர்வள ஆதாரத் துறையின் கீரனூர் பிரிவு அலுவலகத்தின் கண்காணிப்பில் உள்ள இந்த கண்மாய்க்கு, நீர்பழனி, ஒளவையார்பட்டி கண்மாய்களில் இருந்து வெளியேறும் உபரி நீரானது அணைக்கட்டு வழியாக வரும். பெரியகுளத்தில் மழை காலங்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரைப் பயன்படுத்தி சுமார் ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், அணைக்கட்டில் இருந்து பெரியகுளம் வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டருக்கு கால்வாய் தூர்ந்துவிட்டது. இதனை தூர் வாரக் கோரி நீர்வளத் துறையினரிடம் அப்பகுதி விவசாயிகள் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த சில தினங்களால் இப்பகுதியில் கனமழை பெய்தும், பெரியகுளம் நிரம்பவில்லை. இதையடுத்து, செங்களாக்குடி கிராம மக்கள், அவசரக் கூட்டம் நடத்தி, குடி வரி மற்றும் தன்னார்வலர்களிடம் இருந்து நிதி பெற்று கடந்த 2 நாட்களாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இயந்திரம் மூலம் கால்வாய் தூர்வாரி வருகின்றனர்.
இது குறித்து செங்களாக்குடி கிராம மக்கள் கூறியது: கால்வாய் தூர்ந்துவிட்டதால் கடந்த 15 ஆண்டு களாக பெரியகுளம் நிரம்பவில்லை. கால்வாயை தூர் வாரக் கோரி பல ஆண்டுகளாக நீர்வள ஆதாரத் துறையி னரிடம் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே, நாங்களே குடி வரி வசூலித்து பொக்லைன் மூலம் கால்வாயை தூர் வாரும் பணியை மேற்கொண்டுள்ளோம் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago