பயிர் பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த உத்தரவு - திருச்சி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு நேரிடாது : ஆட்சியர் சு.சிவராசு தகவல்

By செய்திப்பிரிவு

திருச்சி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு நேரிடாது என்றும், பயிர் பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது என்றும் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக கோரையாறு, குடமுருட்டி, உய்யக்கொண்டான் வாய்க்கால்களில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடுகிறது மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப் புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. மேலும், அந்தநல்லூர், திருவெறும்பூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வயல்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழை பாதிப்பு களை மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு நேற்று கூறியது:

கோரையாற்றில் விநாடிக்கு 25,000 கன அடி வரையும், குடமுருட்டி ஆற்றில் 20,000 கன அடி வரையும், உய்யக்கொண்டானில் 1,000 கன அடி வரையும் தண்ணீர் செல்ல முடியும்.

இதேபோல, காவிரியில் விநாடிக்கு 1.2 லட்சம் கன அடி வரையும், கொள்ளிடத்தில் 2.6 லட்சம் கன அடி வரையும் தண்ணீர் செல்ல முடியும். தற்போது கொள்ளிடத்தில் கட்டப்பட்டு வரும் புதிய அணை விநாடிக்கு 4.6 லட்சம் கன அடி வரை தண்ணீரை வெளியேற்றும் திறனுடன் கட்டப் பட்டு வருகிறது.

மேட்டூரில் இருந்து 20,000 கன அடி மற்றும் பவானி, நொய்யல், அமராவதி ஆறுகளில் இருந்து 9,500 கன அடி வீதம் தண்ணீர் வரும் நிலையில், முக்கொம்பில் இருந்து காவிரியில் 1000 கன அடியும், கொள்ளிடத்தில் 29,000 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இனி வரும் தண்ணீரையும் கொள்ளிடத்தில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 50 மிமீ முதல் 60 மிமீ வரை மழை பெய்தாலும் வெள்ள பாதிப்பு நேரிடாது. திருச்சி மாநகரைப் பொறுத்தவரை 30 மிமீ வரை தாங்கும். எனவே, திருச்சி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு நேரிட வாய்ப்பு இல்லை.

மழையால் அந்தநல்லூர், திருவெறும்பூர் ஆகிய வட்டாரங் களில் 200 ஏக்கர் விளை நிலங்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் மழைநீர் வடிந்து விடும் என்பதால் வாழையில் சேதம் ஏற்படாது. இருப்பினும், பயிர் பாதிப்புகள் குறித்து சரி யான கணக்கெடுப்பு நடத்த வேளாண்மை, தோட்டக்கலை, வருவாய் ஆகிய துறை அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்