தென்னக பழங்கால மருத்துவ ஓலைச் சுவடிகள் ஆய்வு மையத்தின் சார்பில், திருநெல்வேலியில் சித்த மருத்துவ ஓலைச் சுவடிகள் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
மைய தலைவர் டாக்டர் எஸ். ராமசாமி தலைமை வகித்து மருத்துவ ஓலைச்சுவடிகளின் முக்கியத்துவம், அதன் தன்மை, சேகரித்தல், பாதுகாத்தல் நூல் வடிவம் பெறுவதற்கான முயற்சிகள், பதிப்பில் ஏற்படக் கூடிய சிக்கல்கள் மற்றும் தீர்வுகள் குறித்து கருத்துரை வழங்கினார்.
ம.தி.தா. இந்து கல்லூரி தமிழ்த்துறை தலைவர் கட்டளை கைலாசம், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை பேராசிரியர் டி.ஜே. ஆகியோர் கருத்துரை வழங்கினர். சித்த மருத்துவ ஆர்வலர்கள், சித்த மருத்துவர்கள், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாதமும் 2 மருத்துவ ஓலைச்சுவடி நூலை கணினி மயமாக்கி அனைவரும் பயன்படுத்தும் வண்ணம், பொதுவெளியில் பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பாளையங்கோட்டை அரசு சித்த சித்த மருத்துவக் கல்லூரி விரிவுரையாளர் ஜி.சுபாஷ் சந்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.
ஒவ்வொரு மாதமும் 2 மருத்துவ ஓலைச்சுவடி நூலை கணினி மயமாக்கி அனைவரும் பயன்படுத்தும் வண்ணம், பொதுவெளியில் பதிவேற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago