திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் - தங்க கொடிமரம் தூய்மைப்படுத்தும் பணி :

By செய்திப்பிரிவு

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் தங்க கொடிமரம் நேற்று தூய்மைப்படுத்தப்பட்டது.

தி.மலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 7-ம் தேதி இரவு தொடங் கியது. காமதேனு வாகனத்தில் எழுந்தருளி சுவாமி அருள்பாலித்தார். அதன்பிறகு நேற்று முன்தினம் இரவு சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவமும், நேற்று வெள்ளி மூஷீக வாகனத்தில் விநாயகர் மற்றும் ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெற்றது.

இதையடுத்து, அண்ணா மலையார் கோயில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் இன்று காலை (10-ம் தேதி) 6 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. இதையொட்டி, தங்க கொடிமரத்தை தூய்மைப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. தங்க கொடிமரத்தை பிரத்யேக பவுடரை கொண்டு தேய்த்து, தண்ணீர் ஊற்றி தூய்மைப்படுத்தினர். இதேபோல், கொடிமரம் அருகே உள்ள பலிபீடம் மற்றும் சுவாமிகளை அலங்கரிக்கும் பிரபை உள்ளிட்ட பொருட்கள் தூய்மைப்படுத்தப்பட்டன.

கொடியேற்றத்துக்கு பிறகு, அண்ணாமலையார் கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் பஞ்ச மூர்த்திகளின் பவனி நடைபெற உள்ளது. வரும் 17-ம் தேதி மாலை பிச்சாண்டவர் உற்சவமும், 18-ம் தேதி காலை புருஷா முனி வாகனத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவமும் நடை பெறும். இதையடுத்து, வரும் 19-ம் தேதி மகா தீபம் வழிபாடு நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்