திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் 2 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று முன் தினம் காலை நிலவரப்படி விநாடிக்கு 1,540 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 2,300 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் உள்ள மதகுகள் மாற்றும் பணி நடைபெறுவதால், அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் 2,300 கனஅடி தண்ணீரும் முழுமையாக வெளி யேற்றப்படுகிறது.
இதனால், தென்பெண்ணை யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலி யாக திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் தென் பெண்ணையாற்றின் கரையோரத் தில் வசிக்கும் மக்களுக்கு பொதுப் பணித்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 97.45 அடியாக தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது. அணையில் 3,392 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 14.2 மி.மீ., மழை பெய்துள்ளது.
இதேபோல் குப்பநத்தம் அணைக்கு விநாடிக்கு வரும் 120 கனஅடி தண்ணீரும் வெளி யேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 57.07 அடியாக பராமரிக் கப்படுகிறது. அணை பகுதியில் 12.2 மி.மீ., மழை பெய்துள்ளது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால் செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், மிருகண்டா நதி அணைக்கு விநாடிக்கு 125 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 87.23 அடியாக உள்ளதால், அணையில் இருந்து விநாடிக்கு 94 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 78.056 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணை பகுதியில் 23.4 மி.மீ., மழை பெய்துள்ளது. இதேபோல், செண்பகத்தோப்பு அணைக்கு விநாடிக்கு 270 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், 37 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 62.32 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 56.51 அடியை எட்டியது. அணையில் 228.513 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.
மழை அளவு விவரம்
தி.மலை மாவட்டத்தில் மழையின் தாக்கம் நேற்று முன்தினம் பிற்பகலில் இருந்து குறைந்தது. இரவு நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய் துள்ளது. பள்ளி, கல்லூரிகள் நேற்று இயங்கின. மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி 29.94 மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும், ஆரணியில் 26, செய்யாறில் 53, செங்கத்தில் 18, ஜமுனாமரத்தூரில் 13, வந்தவாசியில் 51.2, போளூரில் 16.6, தி.மலையில் 46, தண்டராம்பட்டில 17, கலசப் பாக்கத்தில் 41.1, சேத்துப்பட்டில் 25.4, கீழ்பென்னாத்தூரில் 16, வெம்பாக்கத்தில் 36 மி.மீ., மழை பெய்துள்ளது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago