கடலூர் மாவட்டத்தில் தொடரும் கனமழை - மக்கள் தொடர்பு கொள்ள 19 மண்டல அலுவலர்கள் நியமனம் :

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து புகார் தெரிவிக்க 19 மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர் மழை பாதிப்புகளை எதிர்கொள்ள கடலூர் மாவட்டத்தில் 14 வட்டாரங்கள், ஒரு மாநகராட்சி மற்றும் 4 நகராட்சி அளவில் துணைஆட்சியர் நிலையில் மொத்தம் 19 மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் ஒன்றியத்துக்கு கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு (9445000426), அண்ணா கிராமம் ஒன்றியத்துக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் பரிமளம் ( 9486529140), பண்ருட்டி ஒன்றியத்துக்கு மாவட்டஊராட்சி செயலாளர் நாகராஜன்(7695930472), குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் உதயகுமார் (9445000209) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்துக்கு கலால் உதவி ஆணையர் லூர்துசாமி (8072076912), குமராட்சி ஒன்றியத்துக்கு தனித்துணை ஆட்சியர்(முத்திரைத்தாள்)ஜெயக்குமார் (9952712551), முஷ்ணம் ஒன்றியத்துக்கு விருத்தாசலம் துணைபதிவாளர்( கூட்டுறவுத்துறை) (7338720404), கீரப்பாளையம் ஒன்றியத்துக்கு கடலூர் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கண்ணன்(7402606219), மேல்புவனகிரி ஒன்றியத்துக்கு சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, (9445000425), பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் விக்னேஷ்வரன் (9445477830), விருத்தாசலம் ஒன்றியத்துக்கு விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமார்(9445000427), கம்மாபுரம் ஒன்றியத்துக்கு நெய்வேலி தனித்துணைஆட்சியர் (நிலஎடுப்பு) சிவக்குமார்(9486426313), நல்லூர் ஒன்றியத்துக்கு விருத்தாசலம் உதவி இயக்குநர் (தணிக்கை) ரவிச்சந்திரன்(7402606295), மங்களூர் ஒன்றியத்துக்கு விருத்தாசலம் உதவி இயக் குநர் (ஊராட்சிகள்) பிரபாகர் (74026 06298), கடலூர் மாநகராட்சிக்கு மாவட்டஆய்வுக்குழு அலுவலர் ஜெகதீஸ்வரன்( 9003107902), பண்ருட்டி நகராட்சிக்கு கடலூர் ஊரக வளர்ச்சி முகமையின் உதவி திட்ட அலுவலர்(உட்கட்டமைப்பு) ரவிச்சந்திரன் (7402606225) ஆகியோர் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு கடலூர் துணைப் பதிவாளர் பொறுப்பு (கூட்டுறவுத்துறை)ராஜேந்திரன் (7338720403), சிதம்பரம் நகராட்சிக்கு சிதம்பரம் துணை பதிவாளர் (கூட்டுறவுத்துறை) துரைசாமி (7338720405), விருத்தா சலம் நகராட்சிக்கு கடலூர் உதவி இயக்குநர் (நிலஅளவை மற்றும் நிலவாரித்திட்டம்) திருநாவுக்கரசு(9940502424) ஆகியோர் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் பேரிடர் தொடர்பான புகார் மண்டல அலுவலர்களிடம் தெரிவிக்கலாம்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அவசரக்கால கட்டுப் பாட்டு அறையில் செயல்பட்டு வரும் கட்டணமில்லா தொலைபேசிஎண் 1077, தொலைபேசி எண்கள் 04142 – 221383, 04142 - 23393304142 – 221113 மற்றும் வாட்ஸ் அப் எண் 9489930520 ஆகியவற்றிலும் தொடர்பு கொண்டு மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்