மணிமுக்தா ஆற்றுப் பகுதி கிராம மக்களுக்கு எச்சரிக்கை :

மணிமுக்தா நதி அணை மற்றும் செம்படாக் குறிச்சி, மாதவச்சேரி, வெங்கடாம்பேட்டை ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் ஆய்வு செய்தார்.

அப்போது ஆட்சியர் கூறுகையில், "மணிமுக்தா நதியின் இருபுறமும் உள்ள கிராமங்களான ராயபுரம், பாலப்பட்டு, அணைக்கரைகோட்டாலம், சூலாங்குறிச்சி, பல்லகச்சேரி, வீரசோழபுரம், மடம், சித்தலூர், வடபூண்டி, கொங்கராயபாளையம், உடையநாச்சி, கூத்தக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்குவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மழை நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

செம்படாக்குறிச்சி, மாதவச்சேரி மற்றும் வெங்கடாம்பேட்டை ஆகிய கிராமங்களில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்த மான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முன்னெச்சரிக்கை தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன, பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும்" என்றார்.

சங்கராபுரம் அருகேவுள்ள கோமுகி அணையில் இருந்து விநாடிக்கு 1,046 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் அந்த அணையையும் ஆட்சியர் பார்வையிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE