இடியும் நிலையில் தொடக்கப் பள்ளி கட்டிடம் : ராமநாதபுரம் ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் அருகே நரியனேந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி சேதமடைந்த நிலையில் இருப்பதால், மாற்றுப் பள்ளிக் கட்டிடம் கட்டித்தர வேண்டும் எனக் கோரி, ஆட்சி யரிடம் பெற்றோர் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், மாதவனூர் ஊராட்சிக்குட்பட்ட நரியனேந்தல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 30 குழந்தைகள் படிக் கின்றனர். 2 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.

இங்குள்ள பள்ளிக்கட்டிடம் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. தற்போது பள்ளி தொடங்கிய நிலையில், கட்டிட மேற்கூரையிலிருந்து மழைநீர் கசிகிறது.

கட்டிடம் இடியும் தருவாயில் இருப்பதால், உடனே மாற்று பள்ளிக்கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கிராமத் தலைவர் ஆனந்தராஜ் தலைமையில் கிராம மக்கள் ஆட்சியர் சங் கர்லால் குமாவத்திடம் மக்கள் குறை தீர்க்கும் நாளில் மனு அளித்தனர். மனுவை பெற்ற ஆட்சியர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக் கப்படும் என்றார்.

கிராம மக்கள் கூறும்போது, பள்ளிக் கட்டிடம் இடியும் நிலையில் உள்ளதால் குழந்தைகள், ஆசிரியர் களுக்கு அசம்பாவிதம் நேரிடும் அபாயம் உள்ளது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்