பேரிடர் காலத்தில் - அம்மா உணவகங்களை அரசு பயன்படுத்த வேண்டும் : ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முதல்வர் வெளி யிட்ட அறிவிப்பு, வெறும் அறிவிப் புகளாக மட்டுமே உள்ளன. இந்த ஆண்டு பருவமழை தொடக்கத்திலேயே சென்னை கடல்போல் காட்சியளிக்கிறது. மழை வெள்ளத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும். 2 நாட்கள் பெய்த மழையால் சென்னையே தத்தளிக்கிறது. தண்ணீரை வெளியேற்ற வேகம் காட்டப்படவில்லை. மீட்புப் பணி யில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சப்படுகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் வெள்ளம் வரும் முன்பே 15 மண்டலங்களுக்கும் ஐஏஎஸ் அதி காரிகளை நியமித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் தற்போது வெள்ளம் வந்த பின்புதான், சென்னையில் உள்ள மண்டலங்களுக்கு கண் காணிப்பு அலுவலர்களை நியமித்துள்ளனர். இதுபோன்ற பேரிடர் காலத்தில் அம்மா உண வகங்களையும் பயன்படுத்த அரசு உத்தரவிட வேண்டும். வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதில் தமிழக அரசு கோட்டை விட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்