சென்னை வானிலை ஆய்வு மையத்தில் - செயல்படாத ரேடாரை சரிசெய்ய வேண்டும் : சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் செயல்படாமல் உள்ள ரேடாரை சரி செய்து தருமாறு மத்திய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது: கனமழை குறித்த முன்னறிவிப்புகளை மேற்கொள்ள உதவும் சென்னை துறைமுகம் அருகேயுள்ள உள்ள ரேடார் (Doppler Weather Radar) கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. பலமுறை பழுதாகியுள்ள ரேடார் தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வேலை செய்யாமல் உள்ளது. இதனை சரி செய்வதில் அலட்சியம் காட்டப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர் தலையிட்டு ரேடார் செயல்படுவதை உறுதிப் படுத்த வேண்டும். உடனடியாக புதிய ரேடார் சென்னையில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டே புதிய ரேடார் சென்னையில் பொருத்தப்படும் எனக் கூறியிருந்தும், தற்போதுவரை புதிய ரேடார் அமைக்கவில்லை. இது 8 கோடி தமிழ் மக்களின் வாழ்வியலோடு சம்பந்தப்பட்டது என்பதை நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத் தேன். இந்நிலையில், புவி அறிவியல் அமைச் சகத்தின் செயலாளர் ரவிச்சந்திரன் என்னை தொடர்பு கொண்டு பேசினார். சென்னை துறைமுகத்திலுள்ள ரேடாரை பழுது நீக்கும் பணி நடப்பதாகவும் விரைவில் செயல்பாட்டுக்கு வருமெனவும் தெரிவித்தார்.

பருவமழை காலத்தில் முக்கிய ரேடார் வேலை செய்யாமல் போனது குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தற்போது ஹரிகோட்டா மற்றும் காரைக்காலில் உள்ள ரேடார்கள் உதவியுடன் மழை முன்னறிவுப்புகளை வழங்கி வருவதாகவும் விளக்கம் அளித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்