திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் - பெண்ணை போலீஸார் தாக்கினார்களா? : சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ குறித்து எஸ்பி விளக்கம்

By செய்திப்பிரிவு

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் கந்தசஷ்டி விழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (நவ.9) நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. அதேநேரத்தில் தினமும் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் பெண் ஒருவரை போலீஸ் பெண் அதிகாரி ஒருவர் இழுத்து வருவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. மழைக்காக கலையரங்கில் ஒதுங்கிய பக்தர்களை போலீஸார் விரட்டி அடித்ததாகவும், அதனை தட்டிக் கேட்ட பெண்ணை இழுத்துச் சென்று கடுமையாக நடந்து கொண்டதாகவும் தகவல் பரவியது.

ஆனால், இது தவறான தகவல் என காவல்துறை மறுத்துள்ளது.

இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் கூறியதாவது: கடந்த 06.11.2021-ம் தேதி இரவு 8 மணியளவில், திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் சிவகாசியைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்ற பக்தரின் கைப்பையை ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த தனலட்சுமி என்ற பெண் திருடியுள்ளார். சண்முகபிரியாவின் கணவர் முத்துபாண்டி அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.

அப்போது அந்த பெண் தப்பியோட முற்பட்டுள்ளார். இதனால் அவரை திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

இது தான் அந்த வீடியோ காட்சி. பக்தர்களிடம் காவல் துறையினர் எந்த வகையிலும் தவறாக நடந்துகொள்ளவில்லை என்றார்.

மழைக்காக கலையரங்கில் ஒதுங்கிய பக்தர்களை போலீஸார் விரட்டி அடித்ததாகவும், அதனை தட்டிக் கேட்ட பெண்ணை இழுத்துச் சென்று கடுமையாக நடந்து கொண்டதாகவும் தகவல் பரவியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்