திருப்பத்தூரில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை காவல் துறையினர் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர். இதில், தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பகுதியில் ஜோலார்பேட்டை காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்துப்பணியில் ஈடு பட்டிருந்தனர்.
அப்போது, அவ் வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனை மேற்கொண்ட போது அதில் 4 டன் ரேஷன் அரிசி வெளி மாநிலங்களுக்கு கடத்திச்செல்வது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, அரிசி கடத்தலில் ஈடுபட்ட திருப்பத்தூர் போஸ்கோ நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் லோகநாதன்(42) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறை வாக உள்ள வெங்கடேசன், அண்ணா மலை ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 4 டன் ரேஷன் அரிசி திருப்பத்தூர் நுகர் பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago