திருப்பத்தூரில் நாளை - கல்விக்கடன் பெற சிறப்பு முகாம் : ஆட்சியர் அமர் குஷ்வாஹா தகவல்

By செய்திப்பிரிவு

கல்லூரியில் படிப்பதற்கான கல்விக்கடன் சிறப்பு முகாம் திருப் பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ளது என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்விக் கடனுக்காக விண்ணப் பிக்க சிறப்பு கல்விக்கடன் முகாம் நாளை 10-ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இம் முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது ஆதார்கார்டு, குடும்ப அட்டை, பான்கார்டு, பள்ளி மாற்றுச்சான்றிதழ், 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், தந்தை அல்லது தாய் வருமானச்சான்றிதழ், கல்லூரி சேர்க்கைக்கான கடிதம், கட்டண விவரங்கள் அடங்கிய பட்டியல்களுடன் முகாம் நடை பெறும் இடத்துக்கு பெற்றோ ருடன் வரவேண்டும்.

இதில், தேசிய மயமாக்கப் பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் கலந்து கொண்டு மாணவர்களின் விண்ணப் பங்களை பெற்று கல்விக்கடன் வழங்க மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி உரிய சான்றிதழ்களுடன் முகாமில் கலந்து கொண்டு கல்விக்கடன் பெற்று பயன்பெற வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்