காட்பாடி கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் இன்று நடைபெற உள்ளது என கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பரிமளா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட காட்பாடி கோட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் பங்கேற்கும் மக்கள் குறைதீர்வு கூட்டம் இன்று (9-ம் தேதி) காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
காட்பாடி காந்திநகரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அனைத்து மின் நுகர்வோர்களும் பங்கேற்று தங்களின் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago