ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் - கனமழையால் வெறிச்சோடிய மக்கள் குறைதீர்வு கூட்டங்கள் :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி உள்ளிட்டோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக குறைதீர்வு கூட்டத்க்கு பொது மக்களின் வருகை குறைவாக காணப்பட்டது. மனுக்கள் பெறப்படும் இடம் மற்றும் பதிவு செய்யப்படும் இடங்கள் வெறிச் சோடி காணப்பட்டது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. நேற்று அதிகாலை முதல் தொடர் மழை இருந்தாலும் குறைந்த எண்ணிக்கையிலான பொதுமக்கள் மனுக்கள் அளிக்க வந்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.மொத்தம் 163 மனுக்கள் பெறப்பட்டன. குறைதீர்வு கூட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளிடம் கொட்டும் மழையிலும் குடை பிடித்தபடி ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், 187 பொது நல மனுக்களை பொதுமக்கள் ஆட்சியர் அமர்குஷ்வாஹாவிடம் வழங்கினர். மனுக்களை பெற்ற ஆட்சியர் தகுதியுள்ள மனுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர், திட்ட இயக்குநர் செல்வராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில் ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார். உதவித் தொகை உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி 214 பேர் மனு அளித்துள்ளனர். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

தொடர் மழையால், மக்கள் குறை தீர்வு கூட்டத்துக்கு மக்களின் வருகை குறைந்தது.

குறைதீர்வு கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்