கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றுகடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பால சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர் நிலைகள் 90 சதவீதத்திற்கு மேல் நிரம்பி உள்ளன. இதனால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கச் செல்வதை தவிர்க்க வேண்டும். வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங் களில் தாழ்வான பகுதிகளிலும் நீர் நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மழை, வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்க கூடாது. வெள்ளப்பெருக்கு ஏற்படு வதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். பொதுமக்கள் தங்களது ஆதார், குடும்பஅட்டை உள்ளிட்ட முக்கிய மான ஆவணங்களை நெகிழி உறை களில் வைத்து பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரி வித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago