விடுப்பு ஊதிய பாக்கிக்கு 6% வட்டிநீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரிய : அரசு போக்குவரத்து கழக மனு தள்ளுபடி :

By செய்திப்பிரிவு

மதுரை அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற ஊழியர் என்.ஆர்.சுரேஷ்பாபு, உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றபோது எனக்கு உரிய ஒப்படைப்பு விடுப்பு ஊதியம் தரப்படவில்லை. அதனை ஓய்வுபெற்ற நாளி லிருந்து ஆண்டுக்கு 18 சதவீத வட்டியுடன் வழங்க அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப் பட்டிருந்தது.

இதை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரருக்கு ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை 6 தவணைகளில் வழங்க வேண்டும். அதற்கு ஆண்டுக்கு 6 சதவீத வட்டியும் வழங்க வேண்டும் என 26.2.2021-ல் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, மதுரை அரசு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் உயர் நீதிமன்றக் கிளையில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஓய்வுபெற்ற சில நாட்களில் ஒப்படைப்பு விடுப்பு ஊதியம் பெற உரிமை உண்டு. இருப்பினும் மனுதாரர் ஓய்வுபெற்று நீண்ட நாளாகியும் அவருக்கு ஒப்படைப்பு விடுப்பு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் அவருக்கு 6 தவணை களில் ஆண்டுக்கு 6 சதவீத வட்டியுடன் ஒப்படைப்பு விடுப்பு ஊதியத்தை வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்துக் கழக ஊழியர் களுக்கு ஓய்வுபெறும் நாளிலேயே ஒப்படைப்பு விடுப்பு ஊதியம் பெற உரிமையுள்ளது. இதனால் தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட முகாந்திரம் இல்லை. மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர வில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்