சிவகங்கை அருகே பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக் காததைக் கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சிவகங்கை அருகே வீரப்பட்டி யில் 300-க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள ஆலங்கண்மாய், கருங்காலி, வலையங்குளம் ஆகிய 3 கண் மாய்கள் மூலம் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன. இக்கண்மாய்களுக்கு ஷீல்டு கால்வாய் மூலம் பெரியாறு நீர் திறக்கப்பட்டு வந்தது.
பல்வேறு காரணங்களால் இக்கண்மாய்களுக்கு 25 ஆண்டு களுக்கும் மேலாக பெரியாறு நீர் விடவில்லை. இதனால் மழைநீரை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் சிவகங்கை மாவட் டத்துக்கு பெரியாறு நீர் திறக்கப்பட்டது. வழக்கம்போல் வீரப்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் திறக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் அவ்வழியாக வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.
4 மணி நேரத்துக்கும் மேலாக போலீஸார் சமரசப்படுத்தியும் கிராம மக்கள் ஏற்கவில்லை. இதை யடுத்து அங்கு வந்த வட்டாட்சியர் தர்மலிங்கம் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago