விடிய, விடிய பெய்த மழையில் - மதுரையில் தற்காலிக தரைப்பாலம் சேதம் : சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

By செய்திப்பிரிவு

தேனி, வருசநாடு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் வைகை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடு கிறது. மதுரை மாவட்டத்திலும் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து, இரு கரைகளை தொட்டுச் செல்கிறது. ஏற்கெனவே, மதுரை குருவிக்காரன் சாலை தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. யானைக்கல் தரைப்பாலத்தை தண்ணீர் தொட்டுச் செல்கிறது. இப்பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வைகை கரையோரப் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் விடிய, விடிய கொட்டித் தீர்த்த மழையால் மதுரை நகரில் மதுரா கோட்ஸ் அருகே சாலையோரத்தில் இருந்த பழமையான மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது விழுந்ததால் சேதமடைந்தது. தீயணைப்பு, காவல் துறையினர் மரக்கிளைகளை வெட்டி அப்புறப் படுத்தினர். அதன் பிறகு போக்கு வரத்து சீரானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்